10 ஐம்பொன் சிலைகள் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பி வைப்பு
காரியாபட்டி அருகே அம்மன் கோவிலுக்கு சொந்தமான 10 ஐம்பொன் சிலைகள் ஆண்டாள் கோவிலுக்கு ெகாண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே அம்மன் கோவிலுக்கு சொந்தமான 10 ஐம்பொன் சிலைகள் ஆண்டாள் கோவிலுக்கு ெகாண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன.
ஐம்பொன் சிலைகள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெ.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அம்மன் கோவில் ஊரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில் செயல் அலுவலர் தக்காராக நியமனம் செய்யப்பட்டு, நிர்வாகம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோவிலுக்கு சொந்தமான 10 ஐம்பொன் சிலைகளை தொல்லியல் துறை ஆய்வு செய்து, அதுசம்பந்தமாக பதிவு செய்யப்பட்டும் உள்ளது. மேற்படி 10 ஐம்பொன் சிலைகள் குறித்து அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மையம்
இந்தநிலையில், கோவில் காட்டுப்பகுதியில் இருப்பதாலும், இரவு காவலர் இல்லாத காரணத்தினாலும் பாதுகாப்பு கருதி இந்த 10 ஐம்பொன் சிலைகள் கணபதி என்பவர் வீட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலைகளுக்கு அர்ச்சகர் மூர்த்தி என்பவர் பூஜை செய்து வந்தார்.
தற்போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவின்படி கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பு மையத்தில் வைத்து பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் 10 சிலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைப்பதற்கு எடுத்துச்செல்லப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று, பாதுகாப்பு மையத்தில் வைத்தனர்.
Related Tags :
Next Story