கார் மரத்தில் மோதி நிதி நிறுவன அதிபர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 Jun 2021 1:25 AM IST (Updated: 23 Jun 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

கார் மரத்தில் மோதி நிதி நிறுவன அதிபர் பலியானார்.

வேலாயுதம்பாளையம்
புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி,மூர்த்திபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 52). கரூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், நேற்று மாலை கரூரில் இருந்து சொந்த ஊருக்குகரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காரில்வந்து கொண்டு இருந்தார். ஆவாரங்காட்டுபுதூர் அருகே கார் வந்த போது, நிலை தடுமாறி சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story