கொரோனா தடுப்பூசி போட செருப்பை வைத்து இடம் பிடித்த பொதுமக்கள்


கொரோனா தடுப்பூசி போட செருப்பை வைத்து இடம் பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:43 AM IST (Updated: 23 Jun 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

பனமரத்துப்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட செருப்பை வைத்து பொதுமக்கள் இடம் பிடித்தனா.

பனமரத்துப்பட்டி
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பனமரத்துப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மற்றும் மல்லூர், தும்பல்பட்டி, கொண்டலாம்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பழனி ஆண்டவர் திருமண மண்டபத்தில் காலை 8 மணி அளவில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் காலை 6 மணிக்கு திருமண மண்டபத்தின் முன் குவிய தொடங்கினர். அப்போது அவர்கள் கூட்டமாக நின்றதால் பேரூராட்சி அலுவலர்கள் அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி தனித்தனியே நிற்குமாறு கூறினர். 
ஆனால் தடுப்பூசி போட வந்தவர்கள் டோக்கன் பெறுவதற்காக தங்களது செருப்புகளை வரிசையில் வைத்து இடம் பிடித்தனர். இதனைக்கண்ட பேரூராட்சி அலுவலர்களும், போலீசாரும் பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கூறினால், இவ்வாறு செருப்பை வைத்து இடம் பிடித்து விட்டு கூட்டமாக போய் நின்று கொள்கின்றனர், இவ்வாறு இருந்தால் எவ்வாறு கொரோனா நோய்த்தொற்றை குறைக்க முடியும் என ஆதங்கத்துடன் கூறிச் சென்றனர்.

Next Story