கொரோனாவுக்கு 23 பேர் பலி


கொரோனாவுக்கு 23 பேர் பலி
x
தினத்தந்தி 23 Jun 2021 1:44 AM IST (Updated: 23 Jun 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 485 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 485 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
485 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவின் பாதிப்பு 500-க்கும் கீழ் வந்தது. அதாவது, 485 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 91 பேர், வீரபாண்டியில் 26 பேர், தாரமங்கலத்தில் 25 பேர், நங்கவள்ளியில் 20 பேர், ஓமலூரில் 17 பேர், சேலம் ஒன்றியத்தில் 14 பேர், சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், மேச்சேரியில் 11 பேர், கொளத்தூரில் 10 பேர், எடப்பாடியில் 9 பேர், ஆத்தூர், மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், கொங்கணாபுரம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், பனமரத்துப்பட்டியில் 5 பேர், நரசிங்கபுரம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், தலைவாசலில் 3 பேர், காடையாம்பட்டியில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
817 பேர் டிஸ்சார்ஜ்
சேலம் மாவட்டத்துக்கு திருச்சியில் இருந்து வந்த 19 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 18 பேர், கள்ளக்குறிச்சி, திருப்பூரில் இருந்து வந்த தலா 17 பேர், நாமக்கல், திருவண்ணாமலையில் இருந்து வந்த தலா 16 பேர், தர்மபுரி, கோவையில் இருந்து வந்த தலா 15 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 13 பேர், கரூர், திருப்பத்தூரில் இருந்து வந்த தலா 12 பேர், சென்னையில் இருந்து வந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளன.
மேலும் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 817 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 696 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
23 பேர் பலி
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 23 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,408 ஆக அதிகரித்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

Next Story