பழங்குடி இனத்தவருக்கு சாதி சான்றிதழ் ஆர்.டி.ஓ. வழங்கினார்
ஊத்துக்கோட்டை அருகே, பழங்குடி இனத்தவருக்கு சாதி சான்றிதழ் ஆர்.டி.ஓ. வழங்கினார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ.நகரில் பழங்குடி இனத்தவர்கள் 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் அரசு அறிவிக்கும் சலுகைகள் பெறாமல் இருந்தனர். சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் புதிய தாசில்தாராக ராமன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பழங்குடி இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் 34 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தாசில்தார் ராமன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ. ப்ரீத்தி பார்கவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 34 பேருக்கு சாதி சான்றிதழ்கள் மற்றும் 10 பொருட்கள் கொண்ட தொகுப்புகளை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நாகன், கிராம நிர்வாக அலுவலர் வாள்மூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story