ஆரணியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்களான அண்ணாமலை, வாசுதேவன் மற்றும் துப்புரவு பணியாளர் பிரதாப் ஆகியோர் துப்புரவு பணி செய்து வருகின்றனர்.
நகராட்சி பகுதியில் அவர்கள் மேற்கொள்ளும் துப்புரவு பணியில் ஆரணி சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்க தலைவர் அருண்குமார் குைறகளை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேற்கண்ட 3 பேரும் சேர்ந்து ஆரணி டவுன் போலீசில் அருண்குமார் மீது தனித்தனியாக புகார் செய்தனர்.
அதில், நாங்கள் துப்புரவுப் பணி செய்யும்போது, எங்களின் பணிகளில் குறைகளை கண்டுபிடித்து, அருண்குமார் தகாத வார்த்தைகளால் பேசி எங்களை திட்டுகிறார்.
எனவே அருண்குமார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசாா் நடவடிக்கை எடுக்கவில்லை, எனத் ெதரிகிறது.
தங்கள் புகாா் மீது உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினார்.
உங்களின் புகார் தொடர்பாகப் பேசி கொள்ளலாம், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம், எனக்கூறி சமரசம் செய்தார்.
இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story