கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:51 PM GMT (Updated: 2021-06-23T19:21:42+05:30)

மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாம் தமிழர் கட்சியினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாம் தமிழர் கட்சியினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாண்டி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இதில் தொகுதி செயலாளர் மாரியப்பன், துணைச் செயலாளர்கள் குரு தமிழர், வேல்முருகன், செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ், மகளிர் பாசறை மாவட்ட பொறுப்பாளர் கோமதி மாரியப்பன், தொகுதி துணை செயலாளர் கருப்பசாமி, இலுப்பையூரணி பொறுப்பாளர் தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ேகாரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கை மனு
பின்னர் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கர நாராயணிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி நகரசபை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் கழிவு நீர் வாறுகால் கட்டி சாலைகள் அமைப்பதற்கு  நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு, சாலைகள் கனரக எந்திரங்கள் மூலம் பெயர்க்கப் பட்டு மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்துள்ளது. அனைத்து தெருக்களுக்கும் வாறுகால் கட்டி கழிவுநீர் செல்வதற்கு வழி அமைத்து கொடுத்த பின்னர் தார்சாலைகள் அமைக்க வேண்டும்.
மதுக்கடைகளை மூட வேண்டும்
கோவில்பட்டி பாரதி நகர், கருமாரியம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, கருணாநிதி நகர், வீரவாஞ்சி நகர், ஓடை தெரு, சுப்பிரமணியபுரம் போன்ற பகுதிகளில் ஐம்பது ஆண்டு களுக்கும் மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு அரசு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பெருந் தொற்றால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து அல்லல்படும் நேரத்தில் மதுக் கடைகளை திறந்து வைத்தது நியாயமற்ற செயலாகும். ஆகவே மதுகடை களை அரசு நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story