மனைவியை அடித்துக்கொன்றது ஏன்

மனைவியை அடித்துக்கொன்றது ஏன்
மனைவியை அடித்துக்கொன்றது ஏன்?
மனைவியை அடித்துக்கொன்றது ஏன்?
Published on

கோவை, ஜூன்.24-

மனைவி அடித்துக்கொலை

கோவை காந்திமாநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் குமார் என்கிற லவேந்திரன் (வயது 49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கவிதா (32). லவேந்திரன் இலங்கை அகதி ஆவார்.

கவிதா முதல் கணவரை விட்டு பிரிந்து வந்து 2-வதாக லவேந்திரனை திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கவிதாவின் முதல் கணவருக்கு பிறந்த ஆண்குழந்தையும் தற்போது இவர்களிடம் தான் உள்ளது.

இந்த நிலையில் கவிதா அடிக்கடி செல்போனில் பேசுவதால், லவேந்திரனுக்கு சந்தேகம் எற்பட்டுள்ளது. சம்பவதன்று கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லவேந்திரன் கிரிக்கெட் மட்டையால் கவிதாவை தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் மாறி, மாறி அடித்து உள்ளார்.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.இதையடுத்து லவேந்திரன் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற லவேந்திரனை பிடிக்க வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதாக தனிப்படையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று லவேந்திரனை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

வாக்குமூலம்

கவிதாவை கொலை செய்ததற்கான காரணம் குறித்து லவே ந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லவேந்திரன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கவிதாவை திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் எங்களது குடும்ப வாழ்க்கை எவ்வித பிரச்சினையும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக சென்றது.

குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாததால், கவிதாவை அருகில் உள்ள ஸ்பின்னிங் மில்லிற்கு வேலைக்கு அனுப்பினேன்.

மிகவும் மகிழ்ச்சியாக சென்ற எங்கள் திருமண வாழ்க்கை, என் மனவையின் கையில் செல்போன் வந்த பின்னர் திசை மாறியது. எனது மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பார்.

அவள் யாரிடம் பேசுகிறாள் என்பது குறித்து கேட்டால் சரியாக, பதில் சொல்ல மாட்டாள். இதனால் எனக்கு சந்தேகம் வரும். இப்படி எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்ததால் நான் அவளை கண்டித்தேன். குழந்தைகள் மீது கவனத்தை செலுத்தும்படி கூறினேன்

செல்போன் மோகம்

ஒரு வாரத்திற்கு முன் செல்போனில் பேசுவது குறித்து கவிதாவை கண்டித்தேன். இதனால் அவள், என்னிடம் கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வென்று விட்டாள்.

எங்கே சென்றாள் என்று எனக்கு தெரியவில்லை. அவளின் இந்த செயல் மேலும் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஒருவாரம் கழித்து வீடு திரும்பிய கவிதாவிடம், எங்கு சென்றாய், நமக்கு குழந்தைகள் இருப்பது தெரியவில்லையா. நீ இல்லாமல் குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டனர் என்று கூறினேன்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கிரிக்கெட் மட்டையால் அவளை அடித்தேன். எதிர்பாரதவிதமாக அவள் இறந்து விட்டாள். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து தப்பி சென்று விட்டேன்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கை மனைவியின் செல்போன் மோகத்தால் சிதைந்து விட்டது. நானும் சிறைக்கு சென்று விட்டால் எனது குழந்தைகள் தாய், தந்தை இன்றி தவிப்பார்கள். இதனை என்னால் தாங்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போலீசார் லவேந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com