இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 23 Jun 2021 3:17 PM GMT (Updated: 2021-06-23T20:47:45+05:30)

குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

கூடலூர்:

கூடலூர் நகராட்சி 1-வது வார்டு பூச்சித்தேவர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். அவருடைய மனைவி புவனேஷ்வரி (வயது 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த புவனேஷ்வரி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, புவனேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதற்கிடையே தற்கொலை செய்த புவனேஷ்வரிக்கு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவுக்கான காரணம் குறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story