ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி


ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி
x
ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி
தினத்தந்தி 23 Jun 2021 9:24 PM IST (Updated: 23 Jun 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி

சரவணம்பட்டி

கோவை காளப்பட்டியை அடுத்த வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் இருந்து செரயாம்பாளையம் செல்லும் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 

இங்கு நேற்று காலை அப்பகுதியில் உள்ள வர்கள் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டு நொறுங்கி கிடந்தது.


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அவர்கள், ஏ.டி.எம். மையத்தில் பதிவான தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில், நேற்று முன்தினம் இரவு 12 மணியில் இருந்து 1 மணிக்குள் மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அவர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அப்படி விட்டு விட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story