ரூ.1½ கோடியில் நடைபெறும் திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு


ரூ.1½ கோடியில் நடைபெறும் திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2021 9:47 PM IST (Updated: 23 Jun 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் நடைபெறும் திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 15-வது நிதிக்குழு மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பணிகள், தனிநபர் கழிப்பறை திட்டப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.

ரூ.1½ கோடி மதிப்பீட்டில் நடக்கும் இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நரசிங்கபுரம் கிராமத்துக்கு சென்ற அவர் அங்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பணிகளை ஆய்வு செய்ததோடு ரேஷன் கடையில் பொதுமக்களிடம் முக கவசம் இல்லாமல் வரக்கூடாது, சமூக இடைவெளி விட்டுநிற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

மேலும் ஒதலவாடி, அரும்பலுர், வடமாதிமங்கலம் ஆகிய ஊர்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப்பணிகள், தனிநபர் கழிப்பறை கட்டும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.

Next Story