இனிப்பு கடை உரிமையாளர் தற்கொலை

ஊரடங்கு காரணமாக வியாபாரம் முடங்கியதால் இனிப்பு கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இனிப்பு கடை உரிமையாளர் தற்கொலை
Published on

தேவாரம்:

உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). இவர், மெயின்பஜாரில் இனிப்பு கடை நடத்தி வந்தார். கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக, ஒரு மாதத்துக்கு மேலாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் இனிப்பு கடையில் வியாபாரம் முடங்கியது. போதிய வருமானம் இல்லாததால் வறுமை வாட்டியது.

இதனால் மனம் உடைந்த தமிழ்செல்வன், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தமிழ்ச்செல்வனுக்கு ரஞ்சிதம் (35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com