வாலிபருக்கு அரிவாள் வெட்டு

x
தினத்தந்தி 23 Jun 2021 10:13 PM IST (Updated: 23 Jun 2021 10:13 PM IST)
வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சூடியூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசு வரன் (வயது28). இவர் சூடியூர் மதுக்கடை அருகே மது வாங்கி வந்து வாகனத்தின் அருகிலேயே நின்று மது அருந்தியுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கற்பூர பாண்டியன் (35) என்பவர் இதனை கண்டித்த போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த வெங்கடேசு வரன் அரிவாளால் கற்பூர பாண்டியனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசுவரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





