போலீஸ் மோப்பநாய் காவிரி சாவு
வெடிகுண்டு கண்டறியதலில் நன்கு பயிற்சி பெற்ற போலீஸ் மோப்பநாய் காவிரி இறந்தது. திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் 24 குண்டுகள் முழங்க காவிரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருவாரூர்:
வெடிகுண்டு கண்டறியதலில் நன்கு பயிற்சி பெற்ற போலீஸ் மோப்பநாய் காவிரி இறந்தது. திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் 24 குண்டுகள் முழங்க காவிரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வெடிகுண்டு கண்டறிதலில் பயிற்சி
பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு உற்ற துணையாக மோப்ப நாய்கள் இருந்து வருகிறது. திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்குவதில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து குற்றவாளிகள் குறித்து உரிய அடையாளத்தை காட்டி கொடுத்து உதவிகரமாக இருந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டறிதலில் நன்கு பயிற்சி பெற்ற காவிரி என்ற மோப்பநாய் துப்பறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.
24 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
இந்தநிலையில் உடல் நலக்குறைவால் மோப்பநாய் காவிரி இறந்தது. இறந்த மோப்பநாய் காவிரி உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியில் ஈடுபட்ட மோப்பநாய் காவிரிக்கு திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்கிட உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story