லாரி டிரைவர் தற்கொலை


லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Jun 2021 11:10 PM IST (Updated: 23 Jun 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

லாரி டிரைவர் தற்கொலை

ஆலங்குடி,ஜூன்.24-
ஆலங்குடி தேரோடும் கீழரதவீதியை சேர்ந்தவர்  சரவணமுத்து (வயது 41). லாரி டிரைவரான இவர், வயிற்று வலியால் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் வீட்டில் தூக்குப்போட்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி கவிதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story