பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை விரைவாக விசாரித்து தீர்வுகாண கலெக்டர் அறிவுறுத்தல்


பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை விரைவாக விசாரித்து தீர்வுகாண கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jun 2021 6:00 PM GMT (Updated: 23 Jun 2021 6:00 PM GMT)

உங்கள் ெதாகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

உங்கள் ெதாகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள், சான்றிதழ்கள், பட்டாக்கள் மீது நிலுவை குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள 15 உள்வட்ட வருவாய் கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி மனுக்கள் வழங்கி வருகின்றனர்். இந்த மனுக்களில் 23 வகையான சான்றிதழ்கள் கோரியும், நிலம் மாற்றம், பட்டா மாற்றம் உதவித்தொகை கோரியும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நிலுவையில் உள்ள மனுக்கள் அதற்கான காரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டறிந்தார். மற்ற துறைகளுக்கு அலுவலகம் அமைக்க நிலம் ஒப்படைப்பு, நிலுவையில் குறித்து கேட்டறிந்தார்.

தீர்வு காண வேண்டும்

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

சான்றிதழ்கோரி பொதுமக்கள் அளித்த மனுக்களில் ஆவணங்களை சரிபார்த்து ஜூலை 6-ந்் தேதிக்குள் தீர்வு காணவேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தீர்வுகாண வழங்கியுள்ள நிலவுடமை மேம்பாட்டுத்திட்டம் மனுவின் மீது  வாதி, பிரதிவாதிகளை நேரில் வரவழைத்து அவர்கள் அளிக்கும் ஆவணங்களை சரிபார்த்து அதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தீர்வு காணவேண்டும். 

பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய வழங்கப்பட்ட மனுக்கள் மீது வாதி, பிரதிவாதிகளை நேரில் வரவழைத்து அவர்கள் அளிக்கும் ஆவணங்களை சரிபார்த்து அதன் அடிப்படையில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தீர்வு காண வேண்டும்.

100 நாட்களுக்குள்...

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வுகாண முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 4 தாலுகாவில் பெறப்பட்ட 1958 மனுக்கள் மீது விரைவாக விசாரணை செய்து முடிக்க வேண்டும். 

60 நாட்களுக்கும் மேலாக விசாரணையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும். மற்ற மனுக்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க, முடிந்தவரையில் தீர்வு கிடைக்க வழி வகைகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்வு வழங்க வேண்டும். தள்ளுபடி குறித்து விரிவான தகவலை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சார் ஆட்சியர் (பொறுப்பு) வில்சன் ராஜசேகர், துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார்கள் சிவப்பிரகாசம், மோகன், அனந்தகிருஷ்ணன், மகாலட்சுமி, சமூக பாதுகாப்பு தாசில்தார்கள் குமார், பூங்கொடி, சாந்தி, சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story