இளையான்குடி,
இளையான்குடி துணை மின் நிலையத்தில் உயர் மின்னழுத்த பாதையில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இளையான்குடி டவுன், சாலையூர், மல்லிபட்டினம், கீழாயூர், லட்சுமிபுரம், நகரகுடி, அதிகரை, ஆழிமதுரை ஆகிய கிராமங்களிலும் அவற்றை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலை மின் உதவி செயற்பொறியாளர் மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.இதே போல காளையார்கோவில் மற்றும் மறவமங்களம் துணைமின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இன்று நாட்டரசன்கோட்டை, மேப்பல், குண்டாக்குடை ஆகிய பகுதிகளிலும், நாளை(25-ந்தேதி) மறவமங்களம், வேளாரேந்தல், புல்லுக்கோட்ைட, சேம்பார், பருத்திக்கண்மாய் பகுதிகளிலும், 26-ந்தேதி அண்ணாமலைநகர், கூத்தாண்டம், எம்.வேளாங்குளம் பகுதிகளிலும், 27-ந்தேதி குண்டாக்குடை பகுதியிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிவகங்கை மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.