சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம்


சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 Jun 2021 12:29 AM IST (Updated: 24 Jun 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

சிறந்த சமூக சேவகர் விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் சுதந்திர தினவிழா அன்று விருதுகள் வழங்க உள்ளார்.குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர்நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். மேற்படி விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேம்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேற்படி விருது பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தலா இரண்டு நகல்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நாளை(25-ந்தேதி) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story