ஊரடங்கை மீறி திறந்திருந்த கம்ப்யூட்டர் சென்டர், 7 கடைகளுக்கு ‘சீல்’-நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


ஊரடங்கை மீறி திறந்திருந்த கம்ப்யூட்டர் சென்டர், 7 கடைகளுக்கு ‘சீல்’-நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2021 12:37 AM IST (Updated: 24 Jun 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தால் தமிழக அரசு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளான காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி அரசு அனுமதிக்காத இதர கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி நாமக்கல் நகராட்சியில் ஆணையாளர் பொன்னம்பலம் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று சேலம் சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் அங்கு விரைந்து சென்ற நகராட்சி அதிகாரிகள் கம்ப்யூட்டர் சென்டரை பூட்டி சீல் வைத்தனர். 

இதேபோல் ஊரடங்கை மீறி திறந்து இருந்த ஜவுளி கடை, பாத்திரகடை, ஜெராக்ஸ் கடை, உதிரிபாக விற்பனை கடை உள்பட 7 கடைகளுக்கு அதிகாரிகள் குழுவினர் சீல் வைத்தனர்.

Next Story