பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய கோரிக்கை


பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2021 12:58 AM IST (Updated: 24 Jun 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய கோரிக்கை

திருப்பூர்-
பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனியன் நிறுவன தொழிலாளி
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
 இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
 தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இதில் தங்கியிருந்து தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு உள்ளதால் பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு
இதுகுறித்து தொழிலாளர் சங்கத்தினர் கூறியதாவது:-
திருப்பூரில் தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வின் காரணமாக 50 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களும் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறையவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசி போடும் பணி மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தொழிலாளர்கள் பலருக்கும் தடுப்பூசி கிடைக்கவில்லை. தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறவர்கள் ஏமாற்றத்துடன் செல்லும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. எனவே பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்க அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story