கிணற்றில் குளித்த சிறுவன் பலி


கிணற்றில் குளித்த சிறுவன் பலி
x
தினத்தந்தி 23 Jun 2021 7:30 PM GMT (Updated: 2021-06-24T01:00:05+05:30)

சாத்தூர் அருகே கிணற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமியின் மகன் பிரவீன்குமார் (வயது11). இவன் ஒ.மேட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த சிறுவன் ஒ.மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். கிணற்றில் சிறுவனின் உடல் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Next Story