உடுமலை அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்களின் சம்பளம் ரூ.1 கோடியே 27 லட்சம் கையாடல்


உடுமலை அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்களின் சம்பளம் ரூ.1 கோடியே 27 லட்சம் கையாடல்
x
தினத்தந்தி 24 Jun 2021 1:06 AM IST (Updated: 24 Jun 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்களின் சம்பளம் ரூ.1 கோடியே 27 லட்சம் கையாடல்

திருப்பூர்
உடுமலை அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்களின் சம்பளம் ரூ.1 கோடியே 27 லட்சம் கையாடல் செய்த மேலாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
கலெக்டரிடம் மனு
உடுமலை சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
உடுமலை அரசு மருத்துவமனையில் சுமீத் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் மருத்துவமனையின் சுகாதாரப்பணிகளுக்கு 59 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.510 வீதம் கூலியாக கணக்கிட்டு மாதச்சம்பளம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றிய கணபதிபாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் எங்களது சம்பளக்கணக்கில் ரூ.13 ஆயிரம் வரவு வைத்துவிட்டு, அவர்கள் மூலம் ரூ.6ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இதை நாங்கள் கேட்டபோது, உங்களது சம்பளம் ரூ.7 ஆயிரம் தான் என்கிறார். அதேபோல் எஞ்சிய தொகை வேறு செலவுக்காக, உங்கள் வங்கிக்கணக்கில் போட சொல்வதாகவும் தெரிவித்தார். தொழிலாளர்கள் எடுத்து தர மறுத்தால், அவர்களை வேலையை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டினார்.
ரூ.1 கோடியே 27 லட்சம் கையாடல்
வேலை செய்தாலும், வேலைக்கு வரவில்லை என கணக்கு காண்பித்தார். இதனால் வேலைக்கு பலரும் பயந்துகொண்டு, பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து தந்தனர். சிலரிடம் வேலையை நிரந்தரப்படுத்தி தருவதாகக் கூறி பணம் பெற்றுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் 59 தொழிலாளர்களில், ஒவ்வொரு தொழிலாளியிடம் மாதம் ரூ.6 ஆயிரம் வீதம், 36 மாதங்களில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 44 ஆயிரம் ஏமாற்றி உள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தை தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது தான், எங்களது சம்பளம் ரூ.510 என தெரியவந்தது. எங்களிடம் பெற்ற பணத்தை கேட்டால், மிரட்டுகிறார். சுகாதாரப் பணியாளர்களின் மாத சம்பளத்தில் கையாடல் செய்த மேலாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் எங்களது பணத்தையும் மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Next Story