காயாஓடையில் இருந்து புலியடித்தம்பத்துக்கு ரூ.6½ கோடியில் புதிய தார்சாலை


காயாஓடையில் இருந்து புலியடித்தம்பத்துக்கு ரூ.6½ கோடியில் புதிய தார்சாலை
x
தினத்தந்தி 24 Jun 2021 1:31 AM IST (Updated: 24 Jun 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

காயாஓடையில் இருந்து புலியடித்தம்பத்துக்கு ரூ.6½ கோடியில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

காளையார்கோவில்,

காயாஓடையில் இருந்து புலியடித்தம்பத்துக்கு ரூ.6½ கோடியில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

புதிய தார்சாலை

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் காயாஓடையில் இருந்து புலியடித்தம்பம் வரை ரூ.6 கோடியே 69 லட்சம் செலவில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார்.
இந்த சாலை பணி காயாஓடையில் இருந்து நெடுவந்தாவு, புளிஊரணி, மேலவாக்கோட்டை, நெடோடை, உருவாட்டி வழியாக புலியடித்தம்பம் வரை நடைபெறுகிறது. இந்த சாலை பணியை நேரில் பார்வையிட்ட கலெக்டர் அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
 .அப்போது புதியதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலையில் குழி தோண்டி கலவைகள் சரியான விதத்தில் கலக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தார்.  தோண்டி எடுக்கப்பட்ட கலவைகளின் தரம் குறித்து பார்வையிட்டதுடன் மேலும், தரத்தன்மையை உறுதி செய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

52 சாலைகள் தேர்வு

அதனைத்தொடர்ந்து, கலெக்டர் கூறும் போது, 2020-2021-ம் ஆண்டிற்கு பிரதம மந்திரி கிராமச்சாலை திட்டத்தின் மூலம் 52 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு, 242.70 கிலோ மீட்டர் தூரம் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதற்கேற்ப பொறியாளர்கள் பணி நடைபெறும் பொழுது நேரடியாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.
 அதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், காலதாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும், காலதாமதம் ஆகும் நிலை ஏற்பட்டால் உரிய விளக்கம் தர அறிவுறுத்த வேண்டும். அதேபோல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநனம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story