வாகனம் மோதி தொழிலாளி சாவு


வாகனம் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Jun 2021 2:01 AM IST (Updated: 24 Jun 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்தவர் வெட்டும் பெருமாள் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் தச்சநல்லூர்- மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், வெட்டும் பெருமாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த வெட்டும் பெருமாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெட்டும் பெருமாள் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story