தர்மபுரி மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jun 2021 2:06 AM IST (Updated: 24 Jun 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,043 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 193 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 951 ஆக குறைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 194 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,743 ஆகும்.
1 More update

Next Story