பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் போலீசாருக்கு ஸ்கூட்டர்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் போலீசாருக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் போலீசாருக்கு ஸ்கூட்டர்கள்
Published on

பெரம்பலூர்
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராதிகா அறிவுறுத்தலின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தின் தொடக்க விழா மற்றும் அந்த மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பெண்கள் உதவி மையத்தினை தொடங்கி வைத்து அதில் சேவையாற்ற உள்ளவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் பெண்கள் உதவி மையத்தை 112, 181 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். உதவி மையத்திற்கு போன் செய்தால் உடனே பெண் போலீசார் புகார்தாரரின் இருப்பிடத்திற்கே தேடிச்சென்று தேவையான உதவிகளை செய்வார்கள் என்றார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மணி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வரும் புகார்களை விசாரிக்க செல்ல முதற்கட்டமாக பெரம்பலூர், பாடாலூர், மங்களமேடு ஆகிய போலீஸ் நிலையங்களுக்கும் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் தலா ஒரு ஸ்கூட்டரும், தலா ஒரு மடிக்கணினியும் வழங்கினார். இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கிய பிரகாசம், நீதிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், பெனாசீர் பாத்திமா(பயிற்சி), போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர், மன நல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com