லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 July 2021 5:02 PM IST (Updated: 18 July 2021 5:02 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பிரையண்ட்நகர் 8-வது தெருவில், தூத்துக்குடி அமுதாநகரை சேர்ந்த அருணாசலம் (வயது 45), பிரையண்ட் நகர் 13-வது தெருவை சேர்ந்த சின்னத்துரை (35) ஆகியோர் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருணாசலம், சின்னத்துரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story