பொன்னேரியில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னேரி பேரூராட்சி 200 தெருக்களை கொண்டதோடு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 18 வார்டுகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பேரூராட்சியில் கடந்த 2010-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிர்வாக ஒப்புதல் 2018-ல் கிடைக்கப் பெற்றவுடன் பாதாள சாக்கடை பணிகள் ரூ.54 கோடி மதிப்பில் துவக்கப்பட்டது.
பின்னர் பாதாள சாக்கடை திட்டத்திற்கான தார் சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்ட் குழாய்கள் புதைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பள்ளம் தோண்டப்பட்டு மூடிய பிறகு சாலைகள் அனைத்தும் மண் சாலையாக உருமாற்றம் அடைந்ததுள்ளது. மழை பெய்ததால் சேறும் சகதியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பொன்னேரி பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதியான லட்சுமியம்மன் கோவில் தெரு, பாலாஜி நகர் உட்பட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாத
நிலை ஏற்பட்டது. கடந்த 3 வருடங்களாக சாலையை சீரமைத்து புதிய சாலையை ஏற்படுத்த வேண்டுமென பேரூராட்சிக்கு புகார் அளித்தும், பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக லட்சுமி அம்மன் கோவில் அருகே பொன்னேரி பழவேற்காடு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story