பூண்டி பஸ் நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்; எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்


பூண்டி பஸ் நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்; எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 July 2021 6:03 PM IST (Updated: 18 July 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த பூண்டி பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தார்.

அவருடன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சிட்டிபாபு, பூண்டி ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி என்ற அன்பரசு, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், கட்சி நிர்வாகிகள் வி.எஸ். ரமேஷ் காந்த், லேட்டஸ் கோபிநாத், காஞ்சிப்பாடி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story