கம்பம் பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்


கம்பம் பகுதியில்  கழுதை பால் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 18 July 2021 6:09 PM IST (Updated: 18 July 2021 6:09 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கழுதை பால் விற்பனை அமோகமாக உள்ளது.

கம்பம்:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிலர், கழுதைகளுடன் வந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து கழுதைகளை நேரடியாக தெரு, தெருவாக கொண்டு சென்று அதன் பாலை கறந்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி ஒரு சங்கு கழுதை பால் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், உடல் உறுப்பு பலப்படும் என்றும், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் எனக்கூறியும் அவர்கள் விற்பனை செய்கின்றனர்.
பெண்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். இதனால் கழுதை பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கழுதை பால் வியாபாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். கால்நடையாக ஒவ்வொரு பகுதியாக சென்று 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை முகாமிட்டு கழுதை பால் விற்பனையில் ஈடுபடுகிறோம். பாலில் கலப்படம் இல்லாமல், பொதுமக்கள் கண்முன்பே கறந்து நேரடியாக சூடு மாறாமல் தருகிறோம். பசுக்களை பராமரிப்பதை போல, கழுதைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துள்ளோம். கால்நடை மருத்துவரிடம் காட்டி கழுதைக்கு நோய்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம் என்றார்.


Next Story