கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி: தலைமறைவான தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய டயர் உருக்கு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பழைய டயர்களை உருக்கும் தொழிற்சாலை உள்ளது. கடந்த 1-ந்தேதி இங்குள்ள பாய்லர் ஒன்று வெடித்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்களான ஜிஜேந்திரா (வயது 32), குந்தன் ஓசாரி (21), விதூர் (20) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான தலைமறைவாக உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story