மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

x
தினத்தந்தி 18 July 2021 8:58 PM IST (Updated: 18 July 2021 8:58 PM IST)
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் முத்துமாறன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை தாடிக்கொம்பு ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முத்துமாறன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





