வளவனூர் அருகே தனித்தனி விபத்தில் 2 பேர் பலி

வளவனூர் அருகே நடந்த தனித்தனி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வளவனூர் அருகே தனித்தனி விபத்தில் 2 பேர் பலி
Published on

வளவனூர்,

தனியார் நிறுவன ஊழியர்

விழுப்புரம் அருகே உள்ள வெண்மணியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் பாலு (வயது 20). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் பாலு தன்னுடன் பணியாற்றும் சேர்ந்தனூரை சேர்ந்த கள்ளன் மகன் வினோத் காம்ப்ளி என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை வினோத் காம்ப்ளி ஓட்டினார்.

வளவனூர் அடுத்த பரசுரெட்டிபாளையம்- சிறுவந்தாடு சாலையில் வந்தபோது, இவர்கள் இருவரும் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து விட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வினோத் காம்ப்ளி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொழிலாளி

வளவனூர் அருகே உள்ள நல்லரசன்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குமார் (45), கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வளவனூர் அடுத்த பனங்குப்பத்தில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தனித்தனி புகார்கள் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com