மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

x
தினத்தந்தி 18 July 2021 9:18 PM IST (Updated: 18 July 2021 9:18 PM IST)
வடமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் பலியானார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கூத்தம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50), விவசாயி. நேற்று இவர், தனது வீட்டின் மேல்தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக மின்மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் படுகாம் அடைந்தார்.
இதனையடுத்து முருகேசனை, அவரது குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





