வாணியம்பாடி பகுதியில் புதிய நீர்வீழ்ச்சியில் குளிக்க குவியும் இளைஞர்கள்

புதிய நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதால் இதில் இளைஞர்கள் குளித்து வருகின்றனர்.
வாணியம்பாடி பகுதியில் புதிய நீர்வீழ்ச்சியில் குளிக்க குவியும் இளைஞர்கள்
Published on

வாணியம்பாடி

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று காலை முதல் தொடர்ந்து மீண்டும் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது இதனை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

வெள்ளம் வாணியம்பாடியை கடந்து ஆம்பூர் வழியாக வேலூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

வாணியம்பாடியை அடுத்த சித்தூர் மாவட்டம், ராமகுப்பம் மண்டலத்தில், கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமகுப்பம் அருகே உள்ள தேவராஜபுரம் - வெங்கட்ராஜபுரம் இடையே திம்மகெடா நீர்வீழ்ச்சி, பாறை மடுவு நீர்வீழ்ச்சி புதிதாக உருவாகி உள்ளன.

இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிக்க வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், திருப்பத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆனால் ஆந்திர மாநில வனத்துறையினர், போலீசார் ஒரு பகுதியிலும் கண்காணித்து தமிழகப் பகுதியில் இருந்து வருவோரை தடுக்கின்றனர். மேலும் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள அலசந்தாபுரம், நாராயணபுரம் பகுதியில் தமிழக போலீசாரும் இளைஞர்கள், பொதுமக்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் வனப்பகுதி என்பதால் வேறு வழியாக பொதுமக்கள் நுழைந்து அருவி பகுதிக்கு செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com