ஆம்பூர் அருகே கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது


ஆம்பூர் அருகே  கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 July 2021 9:40 PM IST (Updated: 18 July 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள பூந்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடியை வீட்டில் வளர்த்த விக்னேஸ்வரன் (வயது 28) என்பவரை பிடித்து, கஞ்சா செடியை பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து விக்னேஸ்வரனை ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story