தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 July 2021 9:47 PM IST (Updated: 18 July 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.

தேனி :
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 769 ஆக அதிகரித்தது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேனியை சேர்ந்த 57 வயது பெண், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனியை சேர்ந்த 47 வயது ஆண் ஆகிய 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 511 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் நேற்று குணமாகினர். தற்போது 278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story