குடியாத்தம் அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
கந்து வட்டி கேட்டு மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
குடியாத்தம்
குடியாத்தம், காட்பாடி ரோடு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 41). தனியார் ஒப்பந்ததாரரிடம் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்காக வெற்றுப் பத்திரங்களில் அசோக்குமாரிடம், அஜய் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு பின் அசலும், வட்டியும் அசோக்குமார் செலுத்தியுள்ளார்.
அதன்பின்னர் கையெழுத்திட்டு கொடுத்த பத்திரங்களை அசோக்குமார் கேட்டபோது தராமல் இழுத்தடித்து உள்ளார். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜய், அசோக்குமாரிடம் வட்டியும் முதலுமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் தரவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அசலும் வட்டியும் அப்போதே செலுத்தி விட்டேன், நான் பணம் தர வேண்டியதில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் 3 ப்ருடன் அசோக்குமார் வீட்டிற்கு சென்று மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து அசோக்குமார் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் கந்துவட்டி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அஜய், கதிர், முனிசாமி, ஜெயவேலு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story