அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுசெயலாளர் லட்சுமிநாராயணன், மாநில துணை தலைவர் சோமசுந்தர், முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதியின் அடிப் படையில் தமிழக அரசு புதிய பென்சன் திட்டத்தை உடனடி யாக ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தினை அமல் படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், மாவட்ட பொருளாளர் பொன்னம்பலம் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story