கோத்தகிரியில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு


கோத்தகிரியில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 July 2021 10:48 PM IST (Updated: 18 July 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ஹெல்மெட் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கோத்தகிரி போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

கோத்தகிரி, அரவேனு, பாண்டியன் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார் ஆனந்தராஜ், சண்முகவேல் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு  விழிப்புணர்வு வழங்கினர்.  

அப்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் போட வேண்டும். மலைப்பாதைகளில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும், விதிகளை மீறி வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர். 
1 More update

Next Story