நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,471 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,471 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,471 ஆக அதிகரிப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே நேற்று புதிதாக 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,471 ஆக அதிகரித்து உள்ளது.

821 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே நேற்று 67 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 45 ஆயிரத்து 214 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 436 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 821 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், 3-வது அலையை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com