மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
x
தினத்தந்தி 18 July 2021 11:46 PM IST (Updated: 18 July 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி ரோட்டரி சங்கத்தின் 13-வது தலைவராக என்ஜினீயர் சரவணன் பதவியேற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா தலைமை தாங்கி புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை ஆளுநர் உடையப்பன் சங்க சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் குடும்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தேவகோட்டை, காரைக்குடி, புதுவயல் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Next Story