சிங்கம்புணரி அணிக்கு முதல் பரிசு


சிங்கம்புணரி அணிக்கு முதல் பரிசு
x
தினத்தந்தி 18 July 2021 11:50 PM IST (Updated: 18 July 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் சிங்கம்புணரி அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சிங்கம்புணரி,

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, திருச்சி, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சிங்கம்புணரி அணி கலந்து கொண்டு விளையாடியது. இறுதிப்போட்டியில் சிங்கம்புணரி அணி வெற்றி பெற்று முதல் பரிசு கோப்பை மற்றும் பதக்கத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற சிங்கம்புணரி அணி வீரர்கள் கோப்பையுடன் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். அங்கு சிங்கம்புணரி பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.


Related Tags :
Next Story