முடி திருத்தும் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


முடி திருத்தும் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 19 July 2021 12:09 AM IST (Updated: 19 July 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

முடி திருத்தும் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா சாத்தனவாடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). முடி திருத்தும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பெரம்பலூரில் அரிசி வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர்- எளம்பலூர் செல்லும் சாலையில் சென்றபோது, திடீரென்று மயக்கம் ஏற்பட்ட நிலையில் தங்கராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கீழே உட்கார்ந்தபோது மயங்கி விழுந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தங்கராஜுக்கு தேவி என்ற மனைவியும், ஆனந்த் (16) என்ற மகனும், ஆனந்தி (12) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Related Tags :
Next Story