எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எாிக்க முயற்சி
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எாிக்க முயற்சி நடந்தது.
கரூர்
தமிழகத்தை ஆட்சி சய்த அ.தி.மு.க. அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.பி.சி. சமூகங்களில் உள்ள வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.சி., டி.என்.டி. சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் சுந்தர் தலைமையில் ராயனூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் மற்றும் இடஒதுக்கீடு அரசாணை நகலை எடுக்க முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பகுதிகளில் சிலர் தங்களது வீடுகளின் முன்பும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தையும், அரசாணை நகலையும் எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story