நீதிமன்ற ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு


நீதிமன்ற ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 19 July 2021 12:22 AM IST (Updated: 19 July 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நீதிமன்ற ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்
நீதிமன்ற ஊழியர்
கரூர் வெள்ளாளப்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் லாசர் எபிரேயம் (வயது 40). இவர் கரூர் நீதிமன்றத்தில் ஊழியராக (டைபிஸ்ட்) வேலை பார்த்து வருகிறார்.  இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை பூட்டை விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் லாசர்எபிரேயம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 
ரூ.35 ஆயிரம் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் அலைமாரியில் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து அவர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story