நெல்லையப்பர் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு


நெல்லையப்பர் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 19 July 2021 12:35 AM IST (Updated: 19 July 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நெல்லை ரெயில் நிலையத்துக்கு வந்த வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

நெல்லையப்பர்  கோவில்

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தற்போது திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தினமும் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் நேற்று பேஸ்கார் முருகேசன் தலைமையில் கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதேபோல் பல்வேறு கோவில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

ரெயில் நிலையம்

கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை ரெயில் நிலையத்திற்கு வருகின்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் நெல்லை நெல்லை சந்திப்பு நிலையத்திற்கு வருகின்ற அனைத்து ரெயில்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

Next Story