கல்குவாரி நீரில் மூழ்கி வாலிபர் பலி


கல்குவாரி நீரில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 July 2021 12:43 AM IST (Updated: 19 July 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. அந்த கல் குவாரியில் தண்ணீர் தேங்கி ஒரு குட்டை போன்று உள்ளது. இதில் மொட்டை மலை அருகே உள்ள வன்னியம்பட்டியை சேர்ந்த மாரிக்கனி (வயது 33) மற்றும் சிலர் குளிக்க சென்றனர். அப்போது திடீரென மாரிக்கனிக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வன்னியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வன்னியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாரிக்கனியை தேடினர். ஆனால் நீண்ட நேரத்திற்கு பிறகு அவரை உடலை மீட்டனர்.  இதையடுத்து மாரிக்கனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Related Tags :
Next Story