விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

வலங்கைமான்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த மாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் செந்தில் என்கிற பார்த்திபன் (வயது 28). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் கடந்த 12-ந் தேதி, பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com