மாவட்ட செய்திகள்

விவசாயி தற்கொலை + "||" + Farmer suicide

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை
கடையநல்லூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் செவல்விளை தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). விவசாயியான இவர் கடையநல்லூர் அருகே சுந்தரேசபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் கணேசனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் கணேசன் தோட்டத்துக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்று, கணேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஆறுமுகநேரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
வள்ளியூரில் மருந்து விற்பனை பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மானூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை